அண்ணா பல்கலைக்கழக வழக்கு: உண்மை கண்டறியும் குழு அமைத்த தேசிய மகளிர் ஆணையம்

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வழக்கு: உண்மை கண்டறியும் குழு அமைத்த தேசிய மகளிர் ஆணையம்
Published on

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன்(37) என்ற நபரை கைது செய்தனர். இந்த பாலியல் பலாத்கார விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 2 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹாத்கர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் மராட்டிய மாநில முன்னாள் டி.ஜி.பி. பிரவீன் தீட்சித் ஐ.பி.எஸ்.,(ஓய்வு) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் வரும் 30-ந்தேதி(திங்கள்கிழமை) சென்னைக்கு வர உள்ளனர். இந்த விசாரணைக்கு குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரி மாணவர்கள், வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் உள்பட வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com