அண்ணா பல்கலைகழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் தேதி அறிவிப்பு

அண்ணா பல்கலைகழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவுக்கும், சனிக்கிழமை அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது.

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கல்வி இயக்கம் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிச.9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24-ம் தேதி (சனிக்கிழமை)யும், டிச.10-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com