அண்ணா பல்கலை. தொலைதூர எம்.பி.ஏ. படிப்புகளுக்கு ஆகஸ்டு 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தொலைதூர எம்.பி.ஏ. படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெறுகிறது.
அண்ணா பல்கலை. தொலைதூர எம்.பி.ஏ. படிப்புகளுக்கு ஆகஸ்டு 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையம் (சி.டி.ஓ.இ.) வழங்கும் எம்.பி.ஏ. படிப்புகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

எம்.பி.ஏ. பொது மேலாண்மை, எம்.பி.ஏ. வணிக பகுப்பாய்வு ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிக்க முடியும். onlinecde.annauniv.edu அல்லது cde.annauniv.edu என்ற ஆன்லைன் வாயிலாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான நுழைவுத் தேர்வு அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண் மற்றும் டான்செட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தெகுதி பெற முடியும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com