அண்ணா பல்கைலக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

அண்ணா பல்கைலக்கழக இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அண்ணா பல்கைலக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச்சில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

இதனை தொடர்ந்து ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும், பல முக்கிய தேர்வுகள் மாணவர்களின் எதிர்கால நலனை முன்னிட்டு நடத்தப்பட்டன. இவற்றில் அண்ணா பல்கைலக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தன.

இந்த நிலையில், அண்ணா பல்கைலக்கழக இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளன.

இதன்படி, 2020ம் ஆண்டுக்கான நவம்பர், டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டுக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றை அண்ணா பல்கைலக்கழகத்தின் மாணவ மாணவியர் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com