அண்ணா பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு: டிசம்பர் 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 15-ந்தேதியும், தேர்வு 21-ந் தேதி முதல் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்
Published on: 

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் படித்த இளங்கலை மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பாக சிறப்பு அரியர் தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரியர் தேர்வு

அதன்படி, 2008, 2013, 2017-ம் ஆண்டுகளில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி விதிமுறையின் கீழ் படித்தவர்கள் மற்றும் அதற்கு பிந்தைய சில ஆண்டுகளில் அந்த விதி அமலில் இருந்த காலகட்டத்தில் படித்தவர்கள் எத்தனை ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும் என அதிகபட்ச கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதுவும் முடிந்துவிட்டால் அரியர் தேர்வை எழுத முடியாது.

அப்படிப்பட்டவர்களுக்காக சிறப்பு அரியர் தேர்வுக்கு விருப்பமுள்ளவர்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 15-ந்தேதியும், தேர்வு 21-ந்தேதி முதல் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கட்டணம்

இதற்கான பதிவு கட்டணமாக தன்னாட்சி மற்றும் தன்னாட்சி அல்லாத கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், தேர்வு கட்டணமாக தன்னாட்சி அல்லாத கல்லூரி மாணவர்கள் கூடுதலாக ஒரு பாடத்துக்கு ரூ.150-ம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

X