அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி: செல்லூர் ராஜு விமர்சனம்

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி: செல்லூர் ராஜு விமர்சனம்
Published on

மதுரை,

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எந்த விமர்சனத்திற்கும் ஒரு எல்லை வேண்டும் என சொன்ன அண்ணாமலை, தற்போது திராவிட கட்சிகளை புகழ்ந்து பேசியுள்ளார். அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. அண்ணாமலை காமெடி செய்வதுபோல் நடந்து கொள்கிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்த அண்ணாமலை அரை வேக்காட்டு தனமாக பேசி வருகிறார்.

தமிழகத்தில் திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக்கூடாது என நினைக்கின்றனர். பயத்தின் காரணமாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா நடத்தி உள்ளார். விஜய் அரசியல் களத்திற்கு இன்னும் வரவில்லை. ஒரு இளைஞர் அரசியலுக்கு வருவதை திமுக அரசு தடுக்கிறது. விஜய் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com