கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது அண்ணாமலைக்கு கைவந்த கலை - திருச்சி சூர்யா விமர்சனம்

பாஜக எனக்கு வேண்டவே.. வேண்டாம் என்று திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது அண்ணாமலைக்கு கைவந்த கலை - திருச்சி சூர்யா விமர்சனம்
Published on

சென்னை,

தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த திருச்சி சூர்யா கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி கடந்த 20-ந்தேதி நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன,என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.

என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியதையையும், தமிழ்நாட்டில் பாஜக வளராமல் பார்த்துக் கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன். என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதிவீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை. பயமா?.

அண்ணாமலை இவ்வளவு நாள் என்னை தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும்போது தான் தெரியும். அதிகபட்சம் அமார் பிரசாதையும் கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல்துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார். கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே...எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com