அண்ணாமலை ஏதாவது சொல்லி வருகிறார்

அண்ணாமலை ஏதாவது சொல்லி வருகிறார்
அண்ணாமலை ஏதாவது சொல்லி வருகிறார்
Published on

தினமும் செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக அண்ணாமலை ஏதாவது சொல்லி வருகிறார் என தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் கூறினார்.

பேட்டி

மன்னார்குடியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் எம்.பி.யும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தற்போது மக்கு மலையாகி விட்டார்.

தினமும் செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக அண்ணாமலை ஏதாவது சொல்லி வருகிறார். டெல்டா பகுதியை சேர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் 1 லட்சம் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாய உற்பத்தியை பெருக்கியுள்ளனர்.

உண்மையான டெல்டாகாரர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான டெல்டாகாரர். டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்தான பெருமை ஸ்டாலினுக்கு தான் உண்டு என்பதை விவசாயிகளும், நாட்டு மக்களும் அறிந்துள்ளனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்யாததை தமிழக அரசு செய்துள்ளது.

விவசாயிகளுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை. சோழராஜன், தி.மு.க. நகர செயலாளர் வீரா.கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com