

சென்னை,
கர்நாடக மாநிலத்தில் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சில காலம் விவசாய பணிகளில் ஆர்வம் காட்டி வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு அவர் பா.ஜனதாவில் இணைந்தார்.
அவரது வேகமான செயல்பாடுகளால் பா.ஜனதாவின் தமிழக தலைவராக உயர்ந்தார். அதிரடியான பேச்சுக்களால் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த துடன், நடை பயணம் மூலம் கட்சியையும் வளர்த்தார். இதனிடையே சட்ட மன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மாநில பா.ஜனதா தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார்.
இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட் டணி அமைத்து போட்டியிட்டது. இதில், 27 இடங்களில் போட்டியிட்ட பா.ஜனதா ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து, தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டது ஒரு காரணம் என்று அவ ரது ஆதரவாளர்கள் வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். அண்ணாமலை மாநிலத்தலைவராக இருந் தபோது, நாடாளுமன்ற தேர்தலில் 11 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையில் தற்போது அது 2 சதவீதமாக குறைந்துள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பின்னர் அண்ணாமலைக்கு. கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. அதற்கேற்ப தேர்தல் பிரசாரத்திலும் அண்ணா மலை பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 9-ம் வகுப்பிலிருந்து மும்மொழிக் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்தும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக அண்ணாமலை சமீபத்தில் பரபரப்பு அறிக்கையை வெளியிட் டார். இது பா.ஜனதா தலைமையை அதிர வைத்தது. மத்திய அரசின் எந்தத் திட்டத்துக்கும் முதல் ஆளாக ஆதரவுக் குரல் கொடுத்து வந்த அண்ணாமலை, முதன்முறையாக எதிர்ப்புக்குரலை ஓங்கி ஒலித்தார்.
இது பா.ஜனதாவுக்குள் பலத்த சலசலப்பை உண்டாக்கியது. இதைத்தொடர்ந்து, அண்ணாமலை தனிக்கட்சி தொடங் கப்போகிறார் பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது.
தன்னை மையப்படுத்தி வரும் தகவல்களுக்கு அண்ணாமலை பதில் எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகிறார். அதே நேரம் அண்ணாமலையை சமதானப்படுத்தும் முயற்சிகளும் ஒரு பக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மத்திய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அதில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவ லும் பரவி வருகிறது.
அண்ணாமலை பா.ஜனதாவில் நீடிப்பாரா? தனிக்கட்சி தொடங்குவாரா? என்ற யூகங்களும், தகவல்களும் பரவி வரும் நிலையில், அண்ணாமலை நேற்று மாலை திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலையிடம் நிருபர்கள் தனிக்கட்சி தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு அண்ணாமலை. 'ஓரிரு நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சொல்கிறேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்தநிலையில், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார். அப்போது பாஜவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் நிதின் நபினிடம் ஒப்படைத்தார்.
அதனை தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை அவரது இல்லத்தில் அண்ணாமலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பாரதியார் புத்தகத்தை அமித்ஷாவுக்கு பரிசாக வழங்கினார்.
அமித்ஷாவுடனான சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலமை குறித்து விவரித்ததாக கூறப்படுகிறது. மேலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி சரிந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அமித்ஷாவிடம் அண்ணாமலை கூறியதாக கூறப்படுகிறது. தமிழக பாஜகவில் நிகழும் முரண்பாடுகள் குறித்தும் தலைவர்களிடையே உள்ள அதிருப்தி குறித்தும் அமித் ஷாவிடம் விளக்கியதாகத் தெரிகிறது.
இந்த சந்திப்புக்கு பிறகு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உடனடியாக டெல்லி வருமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இன்றிரவு, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பாரதியார் புத்தகத்தை அமித்ஷாவுக்கு பரிசாக வழங்கினார்.