நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார் - பொன் ராதாகிருஷ்ணன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார் என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார் - பொன் ராதாகிருஷ்ணன்
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காணும் நிலையில், 5 கட்சிகள் தனித்து களம் இறங்குகின்றன.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார் என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

நகர்ப்புற தேர்தல் தொடர்பாக விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்க அண்ணாமலைக்கு முழு அதிகாரம் உள்ளது. தற்போது வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. வேட்பாளர் நேர்காணல் அடுத்த 2 நாட்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார். தேர்தலில் தனித்து போட்டியிட இப்போதைக்கு அவசியம் ஏற்படவில்லை, என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com