கஜா புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க அண்ணாமலை பல்கலைக்கழகம் ரூ.1½ கோடி நிவாரண நிதி

‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1½ கோடி நிவாரண நிதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.
கஜா புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க அண்ணாமலை பல்கலைக்கழகம் ரூ.1½ கோடி நிவாரண நிதி
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று பலர் சந்தித்து கஜா புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க நிவாரண நிதி அளித்தனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.முருகேசன் ரூ.1 கோடியே 57 லட்சத்து 44 ஆயிரத்து 529க்கான காசோலையை முதல்அமைச்சரிடம் வழங்கினார். அப்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் ரூ.2 கோடியும், சிப்காட் சி.எஸ்.ஆர். நிதியின் சார்பில் ரூ.3 கோடியும் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். அப்போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவன மேலாண்மை இயக்குனர் கே.சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடியும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் பணியாளர்கள் சார்பில் ரூ.39 லட்சத்து 61 ஆயிரத்து 297ம் வழங்கப்பட்டது. பிராய்லர் கோஆர்டினேஷன் கமிட்டி தலைவர் ஆர்.லட்சுமணன் ரூ.1 கோடியே 1 லட்சத்து 25 ஆயிரம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் ரூ.1 கோடி, நாமக்கல் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் வி.சுப்பிரமணியன் ரூ.75 லட்சம், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கே.வி.ராமமூர்த்தி ரூ.56 லட்சமும் வழங்கினர்.

மேலும், தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் ரூ.50 லட்சமும், ரூட்ஸ் குழும நிறுவனத்தின் சார்பில் ரூ.25 லட்சமும், கே.பி.ஆர். மில் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கே.பி.ராமசாமி மற்றும் செயல் இயக்குனர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் ரூ.25 லட்சமும், ஸ்ரீ அய்யப்பா சேவா சங்கத்தின் தலைவர் சி.பாஸ்கர் ரூ.10 லட்சத்தையும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவன் ரூ.1 லட்சத்தையும் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com