கொல்லிமலை மலைவாழ் மக்கள் வீட்டில் பாரம்பரிய உணவு சாப்பிட்ட அண்ணாமலை...!

கொல்லிமலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையுடன் மலைவாழ் மக்கள் இன்று கலந்துரையாடினர்.
கொல்லிமலை மலைவாழ் மக்கள் வீட்டில் பாரம்பரிய உணவு சாப்பிட்ட அண்ணாமலை...!
Published on

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் பா.ஜ.க சார்பில் 3 நாள் இளைஞர் அணி பயிற்சி முகாம் நடைபெறுகிறது. அந்த முகாமை இன்று காலை தொடங்கி வைத்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடினர்.

அப்போது 100 நாள் வேலை வாய்ப்பு நாட்கள் குறைவாக இருப்பதாகவும், அதற்கான கூலி குறைத்து வழங்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதைக் கேட்ட அண்ணாமலை 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு தவறாமல் ரூ. 228 வழங்க வேண்டும் மேலும் கூடுதலாக அந்தத் திட்டத்திற்கு வேலை நாட்கள் ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மலைவாழ் மக்கள் குடியிருந்து வரும் ஒரு வீட்டிற்கு சென்று அவர்களுடன் பாரம்பரிய உணவு வகைகளான களி, சிகப்பு அரிசி சாதம் மற்றும் பல்வேறு வகையான உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்தார்.

அந்த முகாமில் கொல்லிமலை நிர்வாகிகள் உட்பட மாவட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com