முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 73-வது பிறந்தநாள்: அண்ணாமலை வாழ்த்து

தனது பிறந்தநாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 73-வது பிறந்தநாள்: அண்ணாமலை வாழ்த்து
Published on

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 73-வது பிறந்தநாள் ஆகும். பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்க ளுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவர், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம், சி.ஐ.டி. நகர் இல்லங்களுக்கு சென்று அவரது உருவப்ப டத்துக்கு மரியாதை செலுத்தினார். கோபாலபுரம் இல்லத்தில் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து அவரிடம் ஆசிபெற்றார். இந்த நிகழ்வுகள் முடிந்தவுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார்.

அங்கு அவருக்கு தி.மு.க. சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர். கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடம் வாழ்த்து பெறும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேடையில் நிர்வாகிகள். தொண்டர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கேக்' வெட்ட உள்ளார். அதன்பின்னர், தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் வரிசையாக வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் வாழ்த்து கூறுவதற்காக அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தர உள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க.வினர் படையெடுத்து வருவார்கள் என்பதால் அண்ணா அறிவாலயம் இன்று விழாக்கோலம் பூண்டு உள்ளது.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com