அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ முதல் மாநில மாநாடு தொடங்கியது ; திரளானவர்கள் பங்கேற்பு

பாஜகவில் இருந்து வெளியேறிய பிறகு அண்ணாமலை நடத்தும் முதல் மாநாடு என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலையின்  ‘வீ த லீடர்ஸ்’ முதல் மாநில மாநாடு தொடங்கியது ; திரளானவர்கள் பங்கேற்பு
Published on

கோவை,

பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், அந்த கட்சியில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை நிறுவினார். அந்த இயக்கத்தில் லட்ச கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் உள்ளவர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி உள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய விவகாரங்களை சுட்டிக்காட்டி, அது தொடர்பான கருத்துக்களை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் வெளிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முழக்கத்துடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் ஒருங்கிணைத்து வருகிறது. நடைபயணம், மாரத்தான், சைக்கிள் பயணம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்நிலையில், அண்ணாமலை தொடங்கி உள்ள வி த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. கோவை பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நடைபெறும் மாநாட்டில் அண்ணாமலை பேசுகிறார். போதையில்லா தமிழகம் என்ற பெயரில் நடக்கும் விழிப்புணர்வு மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டு அரங்கில் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது. திடலுக்கு வெளியே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் இருந்து வெளியேறிய பிறகு அண்ணாமலை நடத்தும் முதல் மாநாடு என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் வியூகங்கள் தொடர்பாக அண்ணாமலை பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com