தமிழக அரசு சார்பில் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்\

அண்ணாவின் 114-வது பிறந்தநாள் அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது.
தமிழக அரசு சார்பில் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்\
Published on

சென்னை,

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள சிலையின் கீழ் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அண்ணாவின் உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், எம்.எல்.ஏ. பிரபாகரராஜா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோன்று அவர்கள் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.யும் பங்கேற்றார்.

சபாநாயகர் அப்பாவு

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில், அண்ணா உருவப்படத்துக்கு சபாநாயகர் அப்பாவு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி

சென்னை அண்ணாசாலையில் அண்ணாவின் உருவ சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், செம்மலை, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கோகுல இந்திரா, சி.விஜயபாஸ்கர், பென்ஜமின் மற்றும் மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் வந்து அண்ணாசாலையில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அகில இந்திய காந்தி காமராஜர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் இசக்கி முத்து, மாநில தலைவர் ஆ.மணி அரசன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

வைகோ

சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அக்கட்சியின் பொதுசெயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கணேச மூர்த்தி எம்.பி., மாவட்ட செயலாளர்கள் கழக குமார், ஜீவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டெல்லியில்...

அண்ணா பிறந்தநாளையொட்டி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சைதை துரைசாமி

எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோன்று மனிதநேய மைய அறக்கட்டளை தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி சென்னையில் உள்ள தனது வீட்டில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com