அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி

ஜோலார்பேட்டையில் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி
Published on

ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி நடைபெற்றது. 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரம், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரம், 15 வயது உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரம், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரம், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரம், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரம் என 3 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கிவைத்தார். க.தேவராஜ் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் காவியா விக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர செயலாளர் அன்பழகன், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. 4-வது இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com