என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. #AnnaUniversity #Engineering
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை 1 லட்சத்து 12 ஆயிரத்து 959 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்கள் உதவி மையங்களை நாடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 10 சதவீத விண்ணப்பங்கள் தான் உதவி மையங்கள் மூலம் வந்துள்ளன. என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 30ந்தேதி கடைசி நாளாக இருந்தது. பின்னா அண்ணா பல்கலைக்கழகம் என்ஜினீயரிங் ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் நீடித்துள்ளது.

இந்நிலையில் 3 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதால் இந்த அவகாசம் நீட்டிப்பு செய்ததாக தெரிகிறது. அதனால் மே.30 ஆம் தேதியுடன் அவகாசம் முடிவிருந்த நிலையில் ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com