24-ந்தேதி முதல் பிராட்வே பேருந்து நிலையம் செயல்படாது என அறிவிப்பு

மறுசீரமைப்பு பணிகள் காரணமாக பிராட்வே பேருந்து நிலையம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
24-ந்தேதி முதல் பிராட்வே பேருந்து நிலையம் செயல்படாது என அறிவிப்பு
Published on

சென்னை,

பிராட்வே பேருந்து நிலையத்தில் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், கடந்த 7-ந்தேதி முதல் இங்கிருந்து  இயக்கப்பட்ட பஸ்கள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையத்திலிருந்து இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் இந்த மாற்றம் செயல்படுத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், 24-ந்தேதி முதல் பிராட்வே பேருந்து நிலையம் செயல்படாது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. அதாவது, பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பஸ்கள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையங்களில் இருந்து 24-ந்தேதி முதல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com