சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் 17 பேர் கொண்ட அலுவல் ஆய்வுக்குழு அறிவிப்பு

த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
அலுவல் ஆய்வுக்குழு
Published on

சென்னை,

கவர்னர் உரை

த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு சபாநாயகர் இருக்கைக்கு வரும் அவர், தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்குகிறார். இந்த உரை சுமார் 1 மணி நேரம் இடம்பெறும் என்று தெரிகிறது.

அதன்பின்னர், கவர்னர் அர்லேகரின் உரையை, வலதுபுற இருக்கையில் அமர்ந்திருக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார். இடதுபுற இருக்கையில் கவர்னரின் முதன்மை செயலாளர் ஷஜன் சிங் சவான் அமர்ந்திருப்பார். கூட்டம் முடிந்ததும் அனைத்து உறுப்பினர்களிடமும் விடைபெற்று கவர்னர் அர்லேகர் புறப்பட்டு செல்வார்.

சட்டசபை கூட்டம்

அதன்பின்னர், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். அனேகமாக 3 அல்லது 4 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 17-வது சட்டமன்ற பேரவையின் அலுவல் ஆய்வுக் குழுவில் யார், யார் இடம்பெற்றுள்ளனர் என்பது தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியலின் முழு விவரம்:-

தலைவர்

1.  ஜே.சி.டி. பிரபாகர், பேரவைத் தலைவர்.

உறுப்பினர்கள்

2.  ச. ஜோசப் விஜய், முதல்-அமைச்சர்.

3.  N. ஆனந்த், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்.

4.  கே.ஏ. செங்கோட்டையன், வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் பேரவை முன்னவர்.

5.  ரா. நிர்மல் குமார், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்.

6.  செ. ராஜேஷ் குமார், சுற்றுலாத்துறை அமைச்சர்.

7.  வன்னி அரசு, சமூக நீதித்துறை அமைச்சர்.

8. ரா. சபரிநாதன், அரசுத் தலைமைக் கொறடா

9. உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்.

10. ஏ வா வேலு

11. சிவசங்கர்

12. எடப்பாடி K. பழனிசாமி

13. ஓ.எஸ். மணியன்

14. முனைவர் (திருமதி) சௌமியா அன்புமணி

15. ஆர். செல்லசுவாமி

16. இராமச்சந்திரன்

17. SSB. சையது பாரூக் பாஷா

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com