மதுரை-சிங்கப்பூர் இடையே வருகிற 22-ந்தேதி முதல் தினசரி விமான சேவை - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு

மதுரை-சிங்கப்பூர் இடையே வருகிற 22-ந்தேதி முதல் தினசரி விமான சேவை இயக்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மதுரை-சிங்கப்பூர் இடையே வருகிற 22-ந்தேதி முதல் தினசரி விமான சேவை - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு
Published on

மதுரை,

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் ரெயில், பஸ் உள்ளிட்டவைகளில் முன்பதிவு செய்து வருகிறார்கள். அதேபோல் வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் வசதிக்காக விமான நிறுவனங்களும் புதிய விமான சேவைகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் பயணிகளின் வசதிக்காக மதுரை-சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவை இயக்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 22-ந் தேதி முதல் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கும் தினசரி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கவுள்ளது.

சிங்கப்பூர்-மதுரை, மதுரை-சிங்கப்பூர் வழித்தடத்திற்கான இந்த மாதம் (அக்டோபர்) மற்றும் நவம்பர் மாதத்திற்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பு, சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com