பணப்பட்டுவாடா தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க இலவச உதவி எண்கள் அறிவிப்பு - சத்யபிரதா சாஹூ

பணப்பட்டுவாடா தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
பணப்பட்டுவாடா தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க இலவச உதவி எண்கள் அறிவிப்பு - சத்யபிரதா சாஹூ
Published on

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உரிய ஆவணங்கள் இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது. பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறையிடம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க இலவச உதவி எண்கள் - 1800 425 6669, வாட்ஸ் ஆப் - 94454 67707. பொள்ளாச்சி ஜெயராமன் புகார் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை உதவியுடன் பணபரிவர்த்தனைகள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆட்சியர், காவல் ஆணையர் அளித்த அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com