ஒமைக்ரான் அச்சுறுத்தல்- தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என புதிய கட்டுப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் அச்சுறுத்தல்- தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
Published on

சென்னை,

ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து இன்று மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • ஜனவரி 10 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
  • மழலையர் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.
  • 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை.
  • 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடைபெறும்.
  • அனைத்து பொருட்காட்சிகள், புத்தக கண்காட்சிகள் நடத்துவது ஒத்திவைக்கப்படுகிறது.
  • திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி.
  • திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
  • உணவகங்கள், தங்கும் விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
  • துணிக்கடைகளில், நகைக்கடகளில் 50 சதவித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com