

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, மதிமுக,, விசிக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட 26 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு நன்னிலம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நன்னிலம் தொகுதி வேட்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் முகமது முபாரக் களம் இறங்கியுள்ளார். இவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.