திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

மார்கழி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் மார்கழி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அதன்படி பவுர்ணமி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6.11 மணிக்கு தொடங்கி மறுநாள் 3-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4.07 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரம் கிரிவலம் செல்ல உகந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3-ந் தேதி கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஆருத்ரா தரிசனத்தின்போது நடராஜ பெருமானுக்கு கார்த்திகை தீப மை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story






