

த.வெ.க. சார்பில் ஆண்டுதோறும் பொதுத்தேர்வில் மாவட்ட மற்றும் சட்டசபை தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை,சான்றிதழ், பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், 4-வது ஆண்டாக, பரிசளிப்பு விழா கடந்த 4 ஆம் தேதி நடந்தது. சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் தலைமை தாங்கினார். த.வெ.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய் பங் கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அரியலூர்,கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சட்டசபை தொகுதிகளில் முதல் 3 இடங்ளை பிடித்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இரண்டாம் கட்ட விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை நீலாங்கரையில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட விழாவில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி முதல் அமைச்சர் விஜய் கவுரவிக்க உள்ளார்.