சீருடை பணியாளர் தேர்வு குறித்த அறிவிப்பு - நாளை வெளியீடு

இந்த அறிவிப்பு வெளியானவுடன் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை விரைவில் தொடங்கும்.
சீருடை பணியாளர் தேர்வு குறித்த அறிவிப்பு - நாளை வெளியீடு
Published on

சென்னை,

தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான இரண்டாம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழக காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் உள்ள இரண்டாம் நிலைக் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு, ஜூன் 30-ந்தேதி(நாளை) வெளியிடப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை விரைவில் தொடங்கும். அதே சமயம் தமிழ்நாடு காவல்துறையில் ஆட்சேர்ப்புக்கான காலியிடங்களின் எண்ணிக்கை, தகுதி அளவுகோல்கள், இட ஒதுக்கீடு கொள்கை மற்றும் தேர்வு செயல்முறை பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏற்கனவே பதிவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com