தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிப்பு

தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இன்றியமையாப் பண்டங்கள் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com