சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பதாக அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பதாக அறிவிப்பு
Published on

சென்னை,

சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது,

நமது நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி நாளை (ஆகஸ்ட் 15-ம் தேதி) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணிக்கின்றோம்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடவும், செயல்படவும் முனைகிறார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பல்கலைக்கழக சட்ட மசோதா உள்ளிட்ட தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், இயற்றப்பட்ட பல முக்கிய சட்ட மசோதாக்களுக்கு வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இவற்றையெல்லாம் கண்டிக்கும் விதமாக நாளை (15.08.2023) அவர் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தினை புறக்கணிக்கிறோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com