

தூத்துக்குடி,
தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபட அரசு அனுமதி அளித்து உள்ளது. எனினும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் 10ம் நாள் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பினால் கடந்த ஆண்டும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்களின்றி நடந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி என அறிவிப்பு வெளியானது.