டிச.17-ல் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறுமென அறிவிப்பு

சேலத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச.17-ல் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறுமென அறிவிப்பு
Published on

சென்னை,

திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு 2வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி திமுக வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலத்தில் திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com