சந்திர கிரகணத்தின்போது திருவண்ணாமலை கோவில் நடை திறந்திருக்கும் என அறிவிப்பு

சந்திர கிரகணம் நிகழும் நாளன்று பெரும்பாலான கோவில்களில் நடை அடைப்பது வழக்கம்.
சந்திர கிரகணத்தின்போது திருவண்ணாமலை கோவில் நடை திறந்திருக்கும் என அறிவிப்பு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாச லேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்க ணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6.29 மணிக்கு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.52 மணிக்கு நிறைவடைகிறது.

மாசி மாத பவுணர்மியையொட்டி நாளை திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நாளை மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி இரவு 7.53 மணிக்கு முடிவடைகிறது. சந்திர கிரகணம் நிகழும் நாளன்று பெரும்பாலான கோவில்களில் நடை அடைப்பது வழக்கம். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சந்திர கிரகணத்தின் போது நடை அடைக்காமல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் சந்திர கிரகணம் முடியும் போதும், சூரிய கிரகணம் தொடங்கும் போதும் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை மாலை 5.10 மணிக்கு கிரகணம் முடியும் போது கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com