தெப்பக்காடு யானைகள் முகாம் 4 நாட்கள் இயங்காது என அறிவிப்பு


தெப்பக்காடு யானைகள் முகாம் 4 நாட்கள் இயங்காது என அறிவிப்பு
x

4 நாட்கள் தெப்பக்காடு முகாமிற்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் 4 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள உத்தரவுகளின்படி, வரும் 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் AITE - 2026 - TOT தென்மண்டல ( South Zone) பயிற்சி நடைபெற உள்ளது.

இதனால் மேற்கண்ட நான்கு நாட்களுக்கு(செப்.23 முதல் 26-ந்தேதி வரை) தெப்பக்காடு வரவேற்பு சரகம் மற்றும் யானைகளுக்கு உணவு அளிக்கும் முகாம் இயங்காது. எனவே வாகன சூழல் சுற்றுலா சவாரி, தங்கும் விடுதிகள் மற்றும் யானைகளுக்கு உணவு அளிக்கும் முகாம்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதை தவிர்த்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story