

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரம் நாளை (21-ந்தேதி) மாலையுடன் முடிவடைகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் தலைவர்கள் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி அன்று கொடைக்கானல் தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி போன்ற வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.