தேர்தல் பிரசாரத்தில் பொங்கல் பரிசு தொகையை அறிவிப்பதா? - திருமாவளவன் கண்டனம்

பொங்கல் பரிசு தொகை அறிவிப்பை தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வது முறையா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் பொங்கல் பரிசு தொகையை அறிவிப்பதா? - திருமாவளவன் கண்டனம்
Published on

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஒரு முதல்-அமைச்சராக செய்யவேண்டிய அறிவிப்பை ஒரு கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் சொல்வது முறையா?

இது அப்பட்டமான விதிமீறலாகும். மக்களுக்கான நலத்திட்டமா அல்லது வாக்குகளுக்காக வழங்கப்படும் முன் பணமா? என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. புயல் வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரமும், மற்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com