வருடாபிஷேக விழா

மானாமதுரை தாயமங்கலம் வைகை கரை அய்யனார், அலங்காரகுளம் சோனையா சாமி கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
வருடாபிஷேக விழா
Published on

மானாமதுரை

மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குலாலர் சமூக நல சங்கத்திற்கு பாத்தியப்பட்ட வைகை கரை அய்யனார், அலங்காரகுளம் சோனையா சாமி கோவில் வருடாபிஷேக விழா மற்றும் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள குதிரை வாகனத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. யாக சாலை பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து புதிதாக கட்டப்பட்ட குதிரை வாகனத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அய்யனார் சோனையா சாமி மற்றும் கோவில் பரிகார தெய்வங்களான காளியம்மன், லாடசன்னாசி, ராக்கச்சி அம்மன், மாயாண்டி சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் மானாமதுரை ஒருங்கிணைந்த குலாலர் சமூக நல சங்க பரம்பரை நிர்வாக அறங்காவலர் மற்றும் தலைவர் காளீஸ்வரன் ஒருங்கிணைந்த குலாலர் சாலிய வாகனன் மக்கள் இயக்க மாநில தலைவர் அமுல்ராஜ் மற்றும் நிர்வாகிகள், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் முன்பாக அன்னதானமும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com