தண்டீஸ்வர அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா

தண்டீஸ்வர அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது
தண்டீஸ்வர அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா
Published on

திருப்புவனம்

திருப்புவனம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தில் தண்டீஸ்வரர் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வருடாபிஷேக விழா 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான 41-வது வருடாபிஷேக விழா காப்பு கட்டுதலுடன் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் விசேஷ பூஜைகள் மற்றும் நாடகங்கள் நடைபெற்றன. விழாவில் 8-ம் நாள் நிகழ்ச்சியாக ராஜகாளி அம்மனுக்கு சுற்றுப்பொங்கல் விழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்பு அழகர் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு 11-ம் நாள் நிகழ்ச்சியாக தண்டீஸ்வர அய்யனார் சுவாமிக்கும் மற்றும் சகல பரிவார தெய்வங்களுக்கும் தீர்த்த பூஜை நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

======

X

Daily Thanthi
www.dailythanthi.com