மதனகோபாலசுவாமி கோவிலில் வருடாபிஷேக விழா

மதனகோபாலசுவாமி கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
மதனகோபாலசுவாமி கோவிலில் வருடாபிஷேக விழா
Published on

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீமரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2013-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 23-ந் தேதி வருடாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 10-வது வருடாபிஷேக விழா தர்மபரிபாலன சங்கம் சார்பில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மதனகோபாலசுவாமி மூலவர், தாயாருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், வாசனை திரவியங்களைக்கொண்டு திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன் குழுவினர் திருமஞ்சனம் நடத்திவைத்தனர். இதனை தொடர்ந்து கம்பத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com