தமிழகத்தில் மேலும் 1,612 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,624இல் இருந்து 1,612 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 1,612 பேருக்கு கொரோனா தொற்று
Published on

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் 1,53,327 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரு நாள் பாதிப்பு 1,612 ஆக உள்ளது.

சென்னையில் மேலும் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,63,789 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 1,626 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,11,061 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17, 150 ஆக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 19 பேரும், தனியர் மருதுவமனைகளில் 9 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணை நோய்கள் இல்லாத 4 பேர் உயிரிழந்தனர்.

கொரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 35,578 ஆக உயர்ந்துள்ளது.

12 வயதிற்குட்பட்ட 102 சிறுவர்களுக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில் இன்று 97 ஆக குறைந்தது.

கோவையில் 181 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 176 ஆக குறைந்தது. ஈரோட்டில் 116 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 109 ஆக குறைந்தது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com