

சென்னை,
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் 1,60,306 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,916 ஆக உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,916 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
சென்னையில் மேலும் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
12 வயதிற்குட்பட்ட 122 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 34 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 12 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவால் மேலும் 34 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,496 ஆக உயர்ந்துள்ளது.
தமிழத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதிற்குட்பட்ட 7 பேர் உயிரிழந்தனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணைநோய்கள் ஏதும் இல்லாத 6 பேர் உயிரிழந்தனர்.
கொரோனாவில் இருந்து மேலும் 1,866 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,31,962 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20,427 ஆக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.