தமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 108 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 108 பேர் உயிரிழப்பு
Published on

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,027 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 108 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,349ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 6,501 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,08,784 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 55,152 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com