நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்
Published on

சென்னை,

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து அண்மை காலமாக பொறுப்பாளர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரும் விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். மேலும் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் சீமான் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.

இந்த நிலையில், நா.த.க.வில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் பதவி வகித்த மகேந்திரன் விலகியுள்ளார். மேடையில் சமூகநீதி பேசும் சீமான், கட்சியில் அதை கொன்று விட்டதாக மகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

2019-ல் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் நா.த.க. சார்பில் போட்டியிட்டு மகேந்திரன் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com