விருதுநகர் பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து - தீயணைப்பு வீரர்கள் படுகாயம்

காயமடைந்த தீயணைப்பு வீரர்களை மீட்புக் குழுவினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
விருதுநகர் பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து - தீயணைப்பு வீரர்கள் படுகாயம்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று ஊழியர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொது திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த பயங்கர விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையின் உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இது குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் விசாரணை நடத்திய நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பட்டாசு ஆலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறின. இதனால் அங்கு தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.

காயமடைந்த தீயணைப்பு வீரர்களை மீட்புக் குழுவினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பட்டாசு ஆலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com