அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த மீண்டும் வாய்ப்பு - தமிழக அரசு அறிவிப்பு

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

முறையாக வரன்முறை செய்யப்படாத பகுதிகளில் 1.1.2011-க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 5-ந்தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வாய்ப்பு அடுத்த ஆண்டு (2027) ஜூலை 5-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்து இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com