வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது

செய்துங்கநல்லூர் அருகே வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது
Published on

ஸ்ரீவைகுண்டம்:

செய்துங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் பகுதியை சேர்ந்தவர் சுடலை மகன் மாயாண்டி (வயது 33). இவர் கடந்த 3.8.2023 அன்று முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் இசக்கிபாண்டி (50) உள்பட சிலரை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கால்வாய் பகுதியை சேர்ந்த தெய்வ கண்ணன் (35) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு மாயவன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரெட்ரிக்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி தெய்வ கண்ணனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com