ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மேலும் ஒருவர் சென்னையில் கைது

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக சென்னையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மேலும் ஒருவர் சென்னையில் கைது
Published on

சென்னை,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிச் செல்வதற்காக, மருத்துவமனைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. நேற்று தாம்பரம் பகுதியில் போலீசார் நடத்தி சோதனையில் ஒரு மருத்துவர் உள்பட 3 பேர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பதற்காக வாங்கிச் சென்ற போது கைது செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பாக திருவண்ணாமலை அரசு மருத்துமனையில் பணிபுரியும் கம்பவுண்டர் ஒருவரும் போலீசாரால் இது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து சென்னை மிண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியரான கார்த்திக் என்பவரை, ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதற்காக, ஐ.சி.எஃப் போலீசார் கைது செய்துள்ளனர். ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக ஏற்கனவே தனியார் மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் கைதான நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com