

ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் திண்டுக்கல்லில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் இன்ஸ்பெக்டர் ரூபாகீதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் ரபீக், போலீசார் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. அப்போது ஊழலை ஒழிப்போம், லஞ்சம் வாங்க கூடாது, லஞ்சம் வாங்குவது குற்றம் என்று மாணவர்கள் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.