

சென்னை,
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னைஇ ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சோதனையில் முடிவிலேயே முழு விவரமும் தெரியவரும்.