தமிழ்நாட்டில் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறை நகராட்சி நிர்வாக அலுவலகங்களில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு சொந்தமான 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எப்போது நுழைவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவர்கள் நுழைந்தால் அங்கு 'பண மழை' பொழியும் என்பது மட்டும் விதியாகிவிட்டது.

சில நாட்களுக்கு முன்புதான் தமிழகம் முழுவதும் உள்ள 62 சார்பதிவாளர் அலுவலகங்களில் (SROs) அதிரடியாகப் புகுந்து, கணக்கில் வராத ரூ.37.76 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த பதற்றம் தணிவதற்குள் அடுத்த அதிரடியில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் தமிழகம் முழுவதிலும் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு சொந்தமான 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி பகுதியில் ரூ. 4 கோடி சாலை பணிகளுக்கான தொகையை விடுவிக்க ஒப்பந்ததாரர்களிடம் நகராட்சி இன்ஜினியர் பட்டுராஜன் என்பவர் ரூ. 4 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. முதல் தவணையாக இன்று ரூ.2 லட்சத்தை ஒப்பந்ததாரர்கள், பட்டுராஜனிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்தனர்.

ஏற்கெனவே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில், தற்போது நகராட்சி நிர்வாக அலுவலகங்களில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com