தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
Published on: 

சென்னை,

கோயம்புத்தூர், நெல்லை, புதுக்கோட்டை, திண்டுக்கல் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி, நகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.

தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எப்போது நுழைவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவர்கள் நுழைந்தால் அங்கு 'பண மழை' பொழியும் என்பது மட்டும் விதியாகிவிட்டது.

சில நாட்களுக்கு முன்புதான் தமிழகம் முழுவதும் உள்ள 62 சார்பதிவாளர் அலுவலகங்களில் (SROs) அதிரடியாகப் புகுந்து, கணக்கில் வராத ரூ.37.76 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த வகையில், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. தொடர் புகார்களின் எதிரொலியாக இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனி குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சோதனை நடத்தினர். புதுக்கோட்டை நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலகத்தில் நுழைந்த அதிகாரிகள் அங்குள்ளோரிடம் விசாரணை நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி அலுவலகம்,. திண்டுக்கல் மாநகராட்சி. பரமக்குடி நகராட்சி அலுவலகமும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைகளுக்கு தப்பவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் லஞ்சப்பணம் சிக்கியது. அது குறித்து, பணியில் உள்ள அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.

ஈரோடு நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்குள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பல்வேறு ஊர்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது

கோயம்புத்தூர், நெல்லை, புதுக்கோட்டை, திண்டுக்கல் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி, நகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com