லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் - முன்னாள் அமைச்சர் வேலுமணி

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறி உள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் - முன்னாள் அமைச்சர் வேலுமணி
Published on

சென்னை

இன்று காலை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார். இது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய நகரங்களில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தகுதி உள்ளது என விதிகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பேராசிரியர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி னர்

இதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில்அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்ப்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு பெற்றது. இதையொட்டி லஞ்ச ஒழிப்புதுறை சொதனை குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி நிருபர்கலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்த ஆதாரமும் இல்லாமல் 3வது முறையாக சோதனை நடைபெற்றுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. சோதனையின் முடிவில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை. பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

நெருங்கிய நண்பர்கள் என்று சிலர் வீட்டில் சோதனை மேற்கொண்டார்கள் என கூறுகிறார்கள் ; ஆனால் அவர்கள் யாரென்றே எனக்கு தெரியாது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com